இலங்கை விமான நிலையங்கள் அதானி கைக்கு?

இலங்கை விமான நிலையங்கள் அதானி கைக்கு?

இலங்கையின் நீர்கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையம், இரத்மலானை விமான நிலையம், மத்தல ராஜபக்ச விமான நிலையம் ஆகிய 3 விமான நிலையங்களையும் இயக்கம் உரிமை இந்தியாவின் அதானி (Adani) நிறுவனத்துக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இலங்கை மக்களுக்கு அதிக நன்மை தரக்கூடிய முறையில் பகிரங்க கேள்விகள் மூலம் முதல் தரமான நிறுவனத்தை தெரிவு செய்யாது பிரதமர் மோதியின் விருப்பத்துக்கு ஏற்பவே அதானி நிறுவனம் 3 விமான நிலையங்களையும் கைக்கொள்கிறது என்று நம்பப்படுகிறது.

அதானி தற்போது இந்தியாவின் 8 விமான நிலையங்களை இயக்குகிறது. இவற்றை அதானி பெறவும் பிரதமர் மோதியின் நட்பு காரணம்.

கொழும்பு துறைமுகத்தின் West Terminal உரிமையும் அதானிக்கு கோத்தபாயா அரசால் கேள்விகள் இன்றி வழங்கப்பட்டு இருந்தது. அதில் முதலிட US International Development Finance Corporation முன்வந்துள்ளது.