இஸ்ரவேலில் இனவாத போக்குவரத்து சேவை

வெள்ளையர்களுக்கு மட்டும் என பொது சேவைகள் இருந்த காலம் போய்விட்ட இக்காலத்தில் இஸ்ரவேலில் இனவாத பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலஸ்தினியர்களுக்கு மட்டும் என பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பஸ் நிலையங்களில் பாலஸ்தினியர்களுக்கு ஒரு வரிசை, யூதர்களுக்கு இன்னோர் வரிசை. இந்த சேவை மத்திய வகுப்பு தொழில் புரியும் பாலஸ்தினியர்களை West Bank இல் இருந்து Tel Aviv இக்கு தினமும் எடுத்துச்செல்லும்.

இதில் யூதர்கள் விரும்பினால் பயணிக்கலாம் ஆனால் யூதர்களுக்குரியத்தில் பாலஸ்தினியர்கள் பயணிக்கக்கூடாது. இந்த சேவையை Afikim Bus Co. என்ற யூத நிறுவனமே நடாத்துகிறது. சுமார் 50,000 பாலஸ்தினியர்கள் இஸ்ரவேலுக்கு தினமும் சென்று வேலை செய்ய அனுமதி கொண்டுள்ளனர்.

இவற்றில் இரு பஸ்கள் சில தினங்கள் முன் சிலரால் தீயிடப்பட்டிருந்தது.