இஸ்ரவேல் நாட்சியை ஒத்தது என்கிறார் இஸ்ரவேல் ஜெனரல்

UN_Israel_Palestinian

இஸ்ரவேலின் உதவி இராணுவ தலைவரான (deputy army chief) ஜெனரல் Yair Golan இஸ்ரவேலை ஹிட்லரின் கீழ் இயங்கிய நாட்சிகளுக்கு ஒத்தது என்றுள்ளார். ஜேர்மன் நாட்சிகளினால் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட யூதர்களை நினைவுகூறும் நிகழ்வு ஒன்றிலேயே அந்த ஜெனரல் இவ்வாறு கூறியுள்ளார். அவர் இவ்வாறு குறிப்பிடுவது இஸ்ரவேல் பாலஸ்தீனியர்களை கையாளும் முறையையே.
.
இந்த ஜெனரலின் பேச்சால் இஸ்ரவேலின் பிரதமர் Netanyahu மிகவும் கோபம் அடைந்துள்ளார். Netanyahu உட்பட பல இஸ்ரவேலின் கடும்போக்கு அரசியல்வாதிகள் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் சில Holocaust இல் இருந்து தப்பிய யுதர்கள் Golan க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
.
கடந்த பெப்ருவரி மாதத்தில் இஸ்ரவேலின் chief-of-staff Lieutenant General Gadi Eisenkot இஸ்ரவேல் இராணுவத்தை அளவுக்கு அதிகமான பலத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டிருந்தார். அப்போதும் கடும்போக்கு அரசியல்வாதிகள் கோபம் அடைந்திருந்தனர்.
.

இவ்வாறு இஸ்ரவேல் இராணுவ அதிகாரிகளே கவலைப்படும்போதும் கையாலாகாத ஐ.நா. East India II போல் இயங்கி வருகிறது.
.