இஸ்ரேலில் மீண்டும் நெற்ரன்யாஹூ, 4 ஆண்டுகளில் 5ம் தேர்தல்

இஸ்ரேலில் மீண்டும் நெற்ரன்யாஹூ, 4 ஆண்டுகளில் 5ம் தேர்தல்

இஸ்ரேலில் கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற 5 ஆவது தேர்தல் மீண்டும் நெற்ரன்யாஹவை (Benjamin Netanyahu, வயது 73) பிரதமர் ஆக்கவுள்ளது. ஆனால் இம்முறையும் எந்த கட்சியும் சுயமாக ஆழ முடியாததால் நெற்ரன்யாஹூ கடும்போக்கு கட்சிகளுடன் கூட்டாகவே ஆழ முடியும்.

இதுவரை எண்ணப்பட்ட 85% வாக்குகளின்படி மொத்தம் 120 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றில் நெற்ரன்யாஹூ கூட்டணி சுமார் 65 ஆசனங்களை பெறக்கூடும்.

ஏற்கனவே பலஸ்தீனர் மீது காழ்ப்பு கொண்ட நெற்ரன்யாஹூ இம்முறை பலஸ்தீனர் மீது அவரிலும் அதிகம் காழ்ப்பு கொண்ட Itamar Ben-Gvir என்பவரின் கட்சியுடனேயே இணைந்து ஆட்சி செய்ய முடியும். ஆனால் இந்த கூட்டும் விரைவில் முறிய வாய்ப்புண்டு.

Ben-Gvir பலஸ்தீனர் மீது வன்முறைகளை செய்தவர் என்ற காரணத்தால் 2007ம் ஆண்டு இஸ்ரேல் நீதிமன்றால் தண்டிக்கப்பட்டவர்.

இஸ்ரேலில் குடியுரிமையுடன் வாழும் அரபுகளை இஸ்ரேலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர் Ben-Gvir.  நெற்ரன்யாஹூ ஆட்சியில் Ben-Gvir மீண்டும் தனது கொள்கைகளை நடைமுறை செய்ய முனையலாம்.

நெற்ரன்யாஹூ பிரதமர் ஆகினால் அவர் மீது தற்போது இடம்பெறும் ஊழல் குற்ற வழக்குகளும் இழுத்து மூடப்படலாம் அல்லது பின் போடப்படலாம்.

நெற்ரன்யாஹூ அமெரிக்க சனாதிபதி பைடெனுடனும் மோதலாம். ஆனாலும் பைடென் பணிந்து போகும் நிலை ஏற்படும்.