இஸ்ரேலில் 12 ஆண்டுகளின் பின் புதிய பிரதமர்

இஸ்ரேலில் 12 ஆண்டுகளின் பின் புதிய பிரதமர்

கடந்த 12 ஆண்டுகளாக இஸ்ரேலில் ஆட்சி செய்த நெட்டன்யாகு (Benjamin Netanyahu) தனது பிரதமர் பதவியை இழக்கும் நிலையில் உள்ளார். இவரை பதவியில் இருந்து நீக்கும் ஓரே கொள்கையில் இடதுசாரி, வலதுசாரி, நடுநிலை மற்றும் அரபு கட்சிகள் இணைந்தே நெட்டன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் இஸ்ரேலில் 4 தேர்தல்கள் இடம்பெற்றன. ஆனால் ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்களை பெற்று இருக்கவில்லை. அதனால் நெட்டன்யாகுவே தொடர்ந்தும் இடைக்கால பிரதமர் ஆக ஆட்சி செய்தார். இறுதியாக இடம்பெற்ற தேர்தலிலும் நெட்டன்யாகு ஆட்சி அமைக்க போதிய ஆசனங்களை பெறவில்லை.

இந்நிலையிலேயே இடது, வலது, மத்திய கொள்கைகளை கொண்ட யூத கட்சிகளும், அங்குள்ள அரபு கட்சியும் இணைந்து நெட்டன்யாகுவை விரட்டுகின்றனர். புதிய கூட்டணி ஆட்சியின் முதல் 2 ஆண்டுகளுக்கு நெட்டன்யாகு ஆட்சி காலத்து பாதுகாப்பு அமைச்சர் பிரதமராக பதவி வகிப்பார். பின் Lipid என்பவர் பிரதமர் ஆவார்.

ஒரு கிழமைக்குள் இந்த கூட்டணி தன்னிடம் ஆட்சிக்கு தேவையான ஆதரவு உள்ளதை பாராளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். தவறின் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் இடம்பெறும்.