இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பலஸ்தீனத்தில் 24 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பலஸ்தீனத்தில் 24 பேர் பலி

வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இஸ்ரேல் பலஸ்தீனர்களின் காசா (Gaza) பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு இதுவரை 6 சிறுவர்கள் உட்பட குறைந்தது 24 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேலின் விமானங்கள் தொடர்ந்தும் அப்பகுதியை தாக்கி வருகின்றது.

பதிலுக்கு பாலத்தீன போராளிகளும் சுமார் 400 சிறிய வகை எறிகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவி உள்ளனர். இவை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.

சுமார் 2.3 மில்லியன் பலஸ்தீனர் வாழும் காசா பகுதியை இஸ்ரேலும், எகிப்தும் கடுமையான கட்டுப்பாடில் வைத்துள்ளன. வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு முன் இஸ்ரேல் காசா பகுதிக்கு எரிபொருள் வழங்குவதை இஸ்ரேல் நிறுத்தி இருந்தது. அதனால் அங்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

யூகிரைனில் இடம்பெறும் யுத்தத்துக்கு அழும் மேற்கு நாடுகள் பலஸ்தீனர் அழிவுக்கு அழுவது இல்லை. மேற்கின் பத்திரிகைகளும் பலஸ்தீனர் அழிவுகளுக்கு பின்பக்க செய்தி வழங்கிவதே அருமை.

ஹமாஸ் (Hamas), இஸ்லாமிக் ஜிகாத் (Islamic Jihad) ஆகிய இரு போராளி குழுக்கள் காசாவில் இருந்தாலும், இம்முறை இஸ்ரேல் இஸ்லாமிக் ஜிகாத்தை மட்டுமே தாக்குகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் 11 தினங்கள் இடம்பெற்ற மோதல்களுக்கு சுமார் 250 பலஸ்தீனர்களும் 13 இஸ்ரேலிகளும் பலியாகி இருந்தனர்.