இஸ்ரேல், பலஸ்த்தான் மோதலுக்கு 30 பேர் பலி

இஸ்ரேல், பலஸ்த்தான் மோதலுக்கு 30 பேர் பலி

இஸ்ரேலுக்கும், பலஸ்தீனர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களுக்கு குறைந்தது 30 பேர் பலியாகி உள்ளனர். அண்மையில் கிழக்கு ஜெருசலேத்தில் (East Jerusalem) மட்டும் நிலவிய மோதல்கள் தற்போது காஸாவுக்கும் (Gaza) பரவியுள்ளது.

மரணித்தோருள் 28 பேர் பலஸ்தீனியர் என்றும் 2 பேர் இஸ்ரேலியர் என்றும் கூறப்படுகிறது.

ஜெருசலேத்தில் போராடும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் (Hamas) குழு சுமார் 400 சிறு ஏவுகணைகளை (rockets) இஸ்ரேல் நோக்கி ஏவியது. அவற்றில் 90% ஏவுகணைகளை தாம் தடுத்து உள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதை தொடர்ந்து இஸ்ரேல் காஸா பகுதியில் சுமார் 150 இடங்களை விமானங்கள் மூலம் தாக்கியது.

தற்போதைய வன்முறைகள் சில பலஸ்தீன குடும்பங்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றி யூதர்களுக்கு வழங்க முனைகையிலேயே ஆரம்பமாகின. அதை விசாரிக்க இருந்த இஸ்ரேல் நீதிமன்றம் தற்போது விசாரணையை பின்போட்டு உள்ளது.