இஸ்லாமியரை பாதுகாக்க கேட்டார் ஒபாமா, இந்தியா பாச்சல்

இஸ்லாமியரை பாதுகாக்க கேட்டார் ஒபாமா, இந்தியா பாச்சல்

அண்மையில் இந்திய பிரதமர் மோதி அமெரிக்கா சென்றிருந்தார். பைடென் அரசு மோதிக்கு பெரும் வரவேற்பு செய்திருந்தது. மோதி காங்கிரசிலும் உரையாற்றி இருந்தார்.

ஆனால் மோதி பயணத்துக்கு சிறிது முன் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஒபாமா கூறிய கருத்து இந்தியாவில் பலத்த ஆவேசத்தை தோற்றியுள்ளது.

ஒபாமா CNN என்ற அமெரிக்கா தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்முகம் ஒன்றில் இந்தியா இஸ்லாமியர் உட்பட இந்திய சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்றும் தவறின் நாடு இழுபடும் என்றும் கூறியிருந்தார். அத்துடன் பைடென் இது தொடர்பாக மோதியுடன் உரையாட வேண்டும் என்றும் ஒபாமா கூறியிருந்தார்.

ஒபாமாவின் இந்த கூற்றே இந்தியாவில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் சிரியா, யேமென் ஆகிய நாடுகளில் குண்டு வீசிய ஒபாமா போன்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு தாம் ஏன் செவிமடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அசாம் முதலமைச்சர் Sarma இந்தியாவில் பல ஒபாமாக்கள் உள்ளனர் என்றும் அவர்களை ஒருகை பார்க்கவேண்டும் (needed to be taken care of)  என்று மறைமுகமாக மிரட்டியுள்ளார்.

மோதியின் பயணத்தின்போது 75 பைடெனின் Democratic கட்சி உறுப்பினர்கள் மோதியிடம் இந்தியாவின் சிறுபாண்மையினர் மீதான ஒடுக்குதல்கள் தொடர்பாக கதைக்கும்படி கையொப்பம் இட்ட ஆவணம் மூலம் கேட்டிருந்தனர்.

இந்தியாவில் சுமார் 80% மக்கள் இந்துக்கள், 14% மக்கள் இஸ்லாமியர். இலங்கையில் சுமார் 70% மக்கள் புத்த மதத்தினர், 13% மக்கள் இந்துக்கள்.