ஈராக் மொஸாட் நிலையத்தை ஈரான் தாக்கியது

ஈராக்கின் வடக்கே உள்ள எர்பில் (Erbil) என்ற நகரில் இயங்கிய இஸ்ரேலின் மொஸாட் உளவு நிலையத்தின் மீது ஈரான் திங்கள் ஏவுகணைகள் கொண்டு தாக்கி உள்ளது.

இந்த தாக்குதலுக்கு 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Kurdish மக்கள் அதிகம் வாழும் ஈராக்கின் இப்பகுதி அமெரிக்காவின் பலத்த ஆதரவை கொண்டது. Kurdish மக்கள் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகள் சந்திக்கும் பகுதியில் செறிந்து வாழ்கின்றனர்.

சிரியாவில் நிலை கொண்டிருந்த ஈரானிய படைகள் மீது இஸ்ரேல் செய்த தாக்குதலுக்கு பதிலடியே இன்றைய தாக்குதல் என்றுள்ளது ஈரான்.

இஸ்ரேல் இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்காவிட்டாலும் அமெரிக்கா தாக்குதலை வன்மையாக கண்டித்து உள்ளது.