ஈரானுள் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்

ஈரானுள் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான் உள்ளே நிலைகொண்டிருந்த Jaish al-Adi என்ற ஆயுத குழு மீது ஈரான் செவ்வாய் ஏவுகணை தாக்குதலை செய்ததை தொடர்ந்து பாகிஸ்தான் இன்று வியாழன் ஈரானில் நிலைகொண்டுள்ள Baluch Liberation Army என்ற ஆயுத குழு மீது ஏவுகணை தாக்குதல் செய்துள்ளது.

ஈரான் தனது தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்று கூறியதை போலவே பாகிஸ்தானும் தனது தாக்குதல் ஈரானுக்கு எதிரானது அல்ல என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.

பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள Sistan என்ற ஈரான் மாநிலத்தில் உள்ள மறைவிடங்களிலேயே இன்றைய தாக்குதல்கள் இடம்பெற்றன.

தமது நாடுகளில் இடம்பெறும் தாக்குதல்கள் தொடர்பாக இரண்டு நாடுகளும் மற்றவர் மீது சந்தேகம் கொண்டே உள்ளனர்.