ஈரான் இராணுவ ஊர்வலம் மீது தாக்குதல், 24 பேர் பலி

Iran

இன்று சனிக்கிழமை ஈரானில் இடம்பெற்ற இராணுவ ஊர்வலம் ஒன்றின் மீது குறைந்தது 4 ஆயுததாரிகள் தாக்கியதில் 24 பேர் பலியாகியும், சுமார் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோரில் பொதுமக்களும் அடங்குவார். ஆயுதாரிகளில் 3 பேர் கொல்லப்பட்டும், ஒருவர் அகப்பட்டும் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
.
இந்த தாக்குதல் ஈரான்-ஈராக் எல்லையோரம் உள்ள Khuzestan Ahvaz என்ற தென்மேற்கு மாகாணத்தின் தலைநகர் Ahvaz இல் இடம்பெற்று உள்ளது.
.
தாக்குதல் செய்த ஆயுததாரிகள் இராணுவ உடையிலேயே அங்கு வந்து தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். உள்ளூர் நேரப்பபடி காலை சுமார் 9:00 மணிக்கு ஆரம்பித்த இந்த தாக்குதல் 10 நிமிடங்களுக்கு நீடித்து உள்ளது.
.
கடந்த ஜூன் மாதம் தற்கொலைகாரர் ஈரானின் பாராளுமன்றம், நூதனசாலை ஆகிய இடங்களில் நடாத்திய தாக்குதலுக்கு 18 பேர் பலியாகி இருந்தனர்.
.