உச்சக்கட்டத்தில் ஒபாமா, Netanyahu மோதல்

KerryNetanyahu

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் இஸ்ரவேல் பிரதமர் Netanyahu வுக்கும் இடையில் நீண்ட காலமாக உறவு முறிந்து வருகின்றது. ஆனால் அந்த முறிவு இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இரு தரப்பும் ஒருவர் மீது மற்றவர் வெளிப்படையாக அவதூறு சொல்லும் நிலையில் உள்ளது.
.
ஒபாமா அரசு ஈரானுடன் அணு உற்பத்தி விடயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை Netanyahuஅறவே விரும்பவில்லை. கடந்த காலங்களில் அமெரிக்கா ஈரான் மீது நடைமுறைப்படுத்திய தடைகளை மேலும் வலுப்படுத்தவே Netanyahu விரும்புகிறார். ஈரான்  மட்டுமே இஸ்ரவேலுக்கு பணிய மறுக்கும் அப்பகுதியில் உள்ள ஒரு நாடு.
.
அமெரிக்கா இரண்டு தலைமைகளை கொண்ட ஒரு அரசியல் அமைப்பு. அதில் ஒரு ஜனாதிபதி, மற்றையது காங்கிரஸ். தற்போது ஜனாதிபதியாக உள்ளவர் ஜனநாய கட்சியை (Democrats) சார்ந்த ஒபாமா. ஆனால் அமெரிக்க காங்கிரசை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குடியரசு கட்சி (Republican). குடியரசு கட்சியினர் பொதுவாக கண்மூடித்தனமான இஸ்ரவேல் ஆதரவாளர். அவர்களின் அழைப்பை ஏற்று Netanyahuஅடுத்த வாரம் அமெரிக்க காங்கிரசில் பேசவுள்ளார். ஆனால் இதுவரை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்திப்பதாக இல்லை. இது வெள்ளைமாளிகையை அவமானப்படுத்தும் செயலாக கருதப்படுகிறது.
.
Netanyahu சில கிழமைகளில் தேர்தலை சந்திக்க உள்ளதால் அமெரிக்க ஜனாதிபதி அவரை சந்திப்பது பக்கசார்பானது என்று கருத இடம் உள்ளதாலேயே ஒபாமா Netanyahuஐ சந்திக்கவில்லை என்கிறது வெள்ளைமாளிகை. அனால் அமெரிக்க வெளியுறவு செயலார் Kerry, Netanyahu ஆகியோர் பேச்சுக்கள் அவர்களிடையே உள்ள விரிசலை தெளிவுபடுத்துகிறது.