உயில் எழுதாது மரணித்த Prince

Prince

கடந்த 21 ஆம் திகதி Prince என்று ஆங்கில இசை உலகில் அழைக்கப்படும் Prince Rogers Nelson என்பவர் மரணமாகியிருந்தார். அமெரிக்காவின் Minneapolis நகரில் பிறந்த இவர் இசைதுறை மூலம் பெருமளவு பணம் சம்பாதித்திருந்தார். ஆனால் இவருக்கு குடும்பமோ, பிள்ளைகளோ இல்லை.
.
இன்று அவரின் சகோதரி Tyka Nelson நீதிமன்றம் ஒன்றுக்கு வழங்கிய தரவுகளின்படி Prince தனது சொத்துக்குளுக்கு வாரிசு யார் என்பதை குறிக்க உயில் எதையும் எழுதி வைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதனால் இவரின் சொத்துகளை பிரிக்கும் பொறுப்பை நீதிமன்றம் அடைந்துள்ளது.
.
இவரின் சொத்துக்கள் சுமார் $300 மில்லியன் ஆக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இவரின் பாடல்களுக்கு மேலும் பலநூறு மில்லியன் வருமானம் எதிர்வரும் காலங்களில் கிடைக்கும்.
.

தொழில் காரணமாக பல சட்டத்தரணிகளுடன் நாளாந்தம் செயல்படும் இவர், உயில் ஒன்றை எழுதாது இருந்தமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை அவர் தனது மரணத்தை எதிர்பாராது இருந்திருக்கலாம்.
.