உலகம் எங்கும் பண வீக்கம், சீனாவில் பண சுருக்கம் 

உலகம் எங்கும் பண வீக்கம், சீனாவில் பண சுருக்கம் 

உலகம் எங்கும் பண வீக்கம் (inflation) அந்த நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கையில் சீனாவில் பண சுருக்கம் (deflation) சீனாவின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. மிகையான inflation, deflation இரண்டுமே விருப்பத்துக்கு உரியன அல்ல.

சீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாத consumer prices index (CPI) கணியத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் CPI 0.8% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

உணவு பொருட்களின் விலைகளை தவிர்த்து கணித்தால் CPI 0.4% ஆல் அதிகரித்து உள்ளது. அவ்வகை வாசிப்பு நலமானது.

சீனாவின் deflation உணவு பொருட்களின் விலைகளிளும், கார் போன்ற வீட்டு வாகனங்களின் விலைகளிலுமே அதிகம் காணப்படுகிறது. உதாரணமாக பன்றி இறைச்சியின் விலை அங்கு 17.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டு சீன புதுவருடம் ஜனவரி மாதம் அமைந்தமையும், இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமைவதும் பன்றி இறைச்சி விலை குழப்பத்துக்கு காரணம் ஆகலாம்.

அங்கு வீட்டு விலைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. சீன பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.