உலகம் புத்தாண்டு கொண்டாட 26 மணித்தியாலங்கள் தேவை

உலகம் புத்தாண்டு கொண்டாட 26 மணித்தியாலங்கள் தேவை

ஒரு நாள் 24 மணித்தியாலங்களை மட்டும் கொண்டிருந்தாலும் உலக நாடுகள் எல்லாம் புத்தாண்டை கொண்டாட மொத்தம் 26 மணித்தியாலங்கள் தேவை. இதற்கு இயற்கை காரணம் அல்ல, பதிலா மனிதம் வரைந்த நெளிந்து செல்லும் International Date Line என்ற கோடே காரணம்.

தற்கால திகதி கணிப்புக்கு அடிப்படையாக உள்ளது 1884ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த International Date Line (IDL) என்ற கோடு. இந்த கோடு 180 பாகை நெட்டாங்கை தழுவி, பசுபிக் கடல் ஊடாக செல்கிறது. இந்த கோட்டுக்கு கிழக்கே முதல் வரும் Samoa என்ற நாடு முதலில் புத்தாண்டை கொண்டாடுகிறது. பின் நியூ சிலாந்தும் அதன் பின் அஸ்ரேலியாவும் கொண்டாடுகின்றன.

ஒரு நேர்கோடு அல்லாத IDL, அரசாட்சிக்கு ஏற்ப சில இடங்களில் கிழக்கேயும், மேற்கேயும் வளைந்து செல்கிறது.

அதேவேளை நாடுகளும் தமக்கு விரும்பிய Time Zone இல் இருக்கலாம் என்றும் விதிக்கப்பட்டது. அதனால் மிக பெரிய சீனா ஒரு Time Zone இல் மட்டும் உள்ளது. ஆனால் ரஷ்யா, அமெரிக்கா, கனடா போன்ற பெரிய சில நாடுகள் பல time zone களில் உள்ளன.

1892ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரை Samoa என்ற நாடு IDL கோட்டுக்கு கிழக்கே இருந்தது. அதனால் அப்போது அது கலிபோர்னியாவுக்கு பின்னரே புதுவருடத்தை கொண்டாடியது. அக்காலத்தில் தற்போதைய American Samoa வும் Samoa வுடன் ஒன்றாக புதுவருடத்தை கொண்டாடின.

ஆனால் 2011ம் ஆண்டு Samoa தன்னை IDL கோட்டுக்கு மேற்கே நகர்த்தியது. அதனாலேயே தற்போது Tonga, Kiribati ஆகிய நாடுகளுடன் Samoa முதலில் புதுவருடத்தை கொண்டாடுகிறது. ஆனால் Samoa வுக்கு மேற்கே உள்ள American Samoa மொத்தம் 26 மணித்தியாலங்களின் பின்னரே புதுவருடத்தை கொண்டாடுகிறது.

GMT (Greenwich Mean Time) அல்லது UTC (Universal Time) பிரித்தானியாவின் Greenwich நகர் ஊடாக செல்லும் 0 பாகை நெட்டாங்கு.