உலகில் இலங்கையின் இராணுவ பலம் 73 ஆம் இடத்தில்

GFP

Global Fire Power அமைப்பு தனது 2015 ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ பல அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு சுமார் 50 கணியங்களை பயன்படுத்தி உலக நாடுகளின் இராணுவ பலத்தை கணிப்பிடு வரிசைப்படுத்தும். அதன் 2016 ஆண்டுக்கான கணிப்பு இலங்கை இராணுவ பலத்தை 73 ஆம் இடத்தில் வைத்துள்ளது. இந்த கணிப்பு அணு ஆயுதங்களை உள்ளடக்கவில்லை.
.
இந்த கணிப்பில் அமெரிக்க இராணுவ பலம் முதலில் உள்ளது. அமெரிக்க படைகளிடம் 13,444 யுத்த விமானக்கள், 8,848 தாங்கிகள், 473 கடல்படை கப்பல்கள் உள்ளன. சுமார் 320 மில்லியன் மக்களை கொண்ட அமெரிக்காவில் சுமார் 1.4 மில்லியன் நிரந்தர படையினரும் 1.1 மில்லியன் மேலதிக படையினரும் உள்ளனர்.
.
இரண்டாவது இடத்தில் உள்ள ரஷ்யாவிடம் 3,547 யுத்த விமானங்கள், 15,398 தாங்கிகள், 352 கடல்படை கப்பல்கள் உள்ளன. சுமார் 142 மில்லியன் மக்களை கொண்ட ரஷ்யாவில் 0,8 மில்லியன் நிரந்தர படையினரும் 2.5 மில்லியன் மேலதிக படையினரும் உள்ளனர்.
.
மூன்றாம் இடத்தில் உள்ள சீனாவிடம் 2,942 யுத்த விமானங்கள், 9,150 தாங்கிகள், 673 கடல்படை கப்பல்கள் உள்ளன. சுமார் 1,367 மில்லியன் மக்களை கொண்ட சீனாவில் 2.3 மில்லியன் நிரந்தர படையினரும் 2.3 மில்லியன் மேலதிக படையினரும் உள்ளனர்.
.
நாலாம் இடத்தில் உள்ள இந்தியாவிடம் 2,086 யுத்த விமானங்கள், 6,464 தாங்கிகள், 202 கடல்படை கப்பல்கள் உள்ளன. சுமார் 1251 மில்லியன் மக்களை கொண்ட இந்தியாவில் 1.3 மில்லியன் நிரந்தர படையினரும் 2.1 மேலதிக படையினரும் உள்ளனர்.
.
5 ஆம் இடத்தில் பிரித்தானியா உள்ளது
6 ஆம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது
7 ஆம் இடத்தில் தென்கொரியா உள்ளது
8 ஆம் இடத்தில் ஜெர்மனி உள்ளது
9 ஆம் இடத்தில் ஜப்பான் உள்ளது
10 ஆம் இடத்தில் துருக்கி உள்ளது
11 ஆம் இடத்தில் இஸ்ரவேல் உள்ளது
12 ஆம் இடத்தில் இந்தோனேசியா உள்ளது
13 ஆம் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது
14 ஆம் இடத்தில் கனடா உள்ளது
15 ஆம் இடத்தில் தாய்வான் உள்ளது
.
17 ஆம் இடத்தில் பாகிஸ்தான் உள்ளது
26 ஆம் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது
35 ஆம் இடத்தில் மலேசியா உள்ளது

.