உலக அளவில் கொழும்பு துறைமுகம் 22ம் இடத்தில்

உலக அளவில் கொழும்பு துறைமுகம் 22ம் இடத்தில்

உலக அளவில் உள்ள 370 துறைமுகங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு துறைமுகத்தின் தரம் (efficiency) 54.090ம் புள்ளிகளை பெற்று 22ம் இடத்தில் உள்ளது என்கிறது 2021ம் ஆண்டுக்கான Global Container Port Performance Index (CPPI) என்ற கணிப்பு. அத்துடன் இத்துறைமுகம் தென் ஆசியாவில் 1ம் இடத்திலும், இந்து சமுத்திரத்தில் 3ம் இடத்திலும் உள்ளது.

CPPI கணிப்பை உலக வங்கியும், S&P Global Market Intelligence and Finance Services இணைந்து ஆண்டுதோறும் செய்கின்றன.

King Abdullah Port (சவுதி, 93.387 புள்ளிகள்), Salalah (ஓமான், 87.372 புள்ளிகள்), Hamad (கட்டார்), Yangshan (சீனா), Khalifa Port (UAE), Tanger-Mediterranean (மொராக்கோ), Ningbo (சீனா), Jeddah (சவுதி), Guangzhou (சீனா), Yokohama (ஜப்பான்) ஆகிய துறைமுகங்கள் முறையே 1ம் இடத்தில் இருந்து 10ம் இடம் வரையில் உள்ளன.

சிங்கப்பூர் துறைமுகம் 31ம் இடத்திலும், ஜகர்வர்லால் நேரு துறைமுகம் 50ம் இடத்திலும் உள்ளன. ஆந்திரா கிருஷ்ணபட்டினம் துறைமுகம் 87ம் இடத்திலும், சென்னை துறைமுகம் 92ம் இடத்திலும் உள்ளன.

கனடாவின் வான்கூவர் துறைமுகம் -245.879 புள்ளிகளை பெற்று 368ம் இடத்திலும், கலிபோர்னியா Long Beach துறைமுகம் -281.841 புள்ளிகளை பெற்று 369ம் இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள Los Angeles துறைமுகம் -348.928 புள்ளிகளை பெற்று இறுதி இடமான 370ம் இடத்தில் உள்ளது.