உலக சுகாதார அளவீட்டில் இலங்கை 85ஆம் இடத்தில்

HAQIndex

உலக அளவில் நடாத்தப்பட்ட Healthcare Access and Quality Index (HAQ) இன்று வெள்ளி வெளியிட்ட கணிப்பில் இலங்கை 73 புள்ளிகளை பெற்று 85ஆம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள Andorra (சனத்தொகை 70,000) 95 புள்ளிகளையும், இரண்டாம் இடத்தில் உள்ள Iceland (சனத்தொகை 330,000) 94 புள்ளிகளையும் கொண்டுள்ளன.
.
இந்த ஆய்வு இலகுவில் குணப்படுத்தக்கூடிய 32 நோய்களுக்கு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் மருத்துவம், அந்நோய்களுக்கு மரணமாவோர் எண்ணிக்கை ஆகிய கணிப்புக்களையும் உள்ளடக்கும்.
.
உலகத்தில் அதி கூடிய பணத்தை சுகாதாரத்துக்கு செலவழிக்கும் அமெரிக்கா 81 புள்ளிகளை மட்டும் கொண்டு 35 ஆம் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் வருடம் ஒன்றில் ஒவ்வொருவருக்கும் $9,000 செலவாகிறது.
.
சனத்தொகை கூடிய நாடுகளில் Switzerland, Sweden, Norway ஆகிய நாடுகள் முறையே 3ம், 4ம், 5ம், இடங்களை அடைந்து முன்னணியில் உள்ளன.
.
தென் ஆசிய பகுதியில் இலங்கை 73 புள்ளிகளை கொண்டு 85 ஆம் இடத்திலும், பங்களாதேசம் 52 புள்ளிகளை கொண்டு 139 ஆம் இடத்திலும், இந்தியா 45 புள்ளிகளை கொண்டு 154 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 43 புள்ளிகளை கொண்டு 160 ஆம் இடத்திலும் உள்ளன.
.

மொத்தம் 132 நாடுகளில் உள்ள 2,300 ஆய்வாளரும், அமைப்புகளும் இந்த ஆய்வில் பங்கு கொண்டிருந்தன. 2015 ஆண்டு வரையான தரவுகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
.
Rank) Country – Index
1) Andorra – 95
2) Iceland – 94
3) Switzerland  – 92
4) Sweden – 90
5) Norway – 90
6) Australia – 90
7) Finland – 90
8) Spain – 90
9) Netherlands – 90
10) Luxembourg – 89
11) Japan – 89
17) Canada – 88
21) Singapore – 86
30) UK – 85
35) USA – 81
53) Cuba – 74
57) Russia – 72
82) China – 74
85) Sri Lanka – 73
131) North Korea – 62
139) Bangladesh – 52
154) India – 45
160) Pakistan – 43