உலக வணிக நாணயமாக மாறும் சீன Yuan

2010 ஆம் ஆண்டில் சீனா தனது நாணயமான Yuan (யுஅன் அல்லது RMB) ஐ உலக வணிக நாணயமாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தது. அதாவது Yuanஐ சர்வதேச கொடுக்கல், வாங்கல் போன்றவற்றுக்கு பயன்படும் நாணயமாகவும், foreign reserve நாணயமாகவும் பயன்படுத்தப்படுவதை ஊக்கிவிக்க சீன அரசு முயன்றது. தற்போது Yuan பயன்பாடு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் பிரித்தானியாவின் Bank of England 200 பில்லியன் Yuan (சுமார் US$ 30 பில்லியன்) currency swap உடன்படிக்கையை Bank of China வுடன் செய்தது.

European Central Bank இப்போது 800 பில்லியன் Yuan ($ 130 பில்லியன்) currency swap உடன்படிக்கையை Bank of China வுடன் செய்கிறது.

Bank of France உம் விரைவில் அவ்வகை உடன்படிக்கை ஒன்றை செய்யவுள்ளது. தற்போது பிரான்சுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சுமார் 10% Yaun நாணயத்திலேயேசெய்யப்படுகிறது.

2013 தையில் உலக வணிகத்தில் நாணயங்களின் பயன்பாடு (தரவு SWIFT)
1. Euro              40.17%
2. U.S. Dollar       33.48%
3. British Pound      8.55%
4. Japanese Yen       2.56%
5. Australian Dollar  1.85%
6. Swiss Franc        1.83%
7. Canadian Dollar    1.80%
8. Singapore Dollar   1.05%
9. Hong Kong Dollar   1.02%
10.Thailand Baht      0.97%
11.Swedish Krona      0.96%
12.Norwegian Krone    0.80%
13.Chinese Yuan       0.63%
14.Danish Krone       0.58%
15.Russian Ruble      0.56%