ஊழல் குற்றச்சாட்டில் மேற்கு வங்காள அமைச்சர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் மேற்கு வங்காள அமைச்சர் கைது

Partha Chatterjee என்ற மேற்கு வங்காள மாநில அமைச்சரை இந்தியாவின் financial-crime விசாரணை பிரிவு இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளது. மேற்படி அமைச்சர் கல்வி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச பாடசாலைகளில் ஆசிரியர்களையும், பணியாளர்களையும் இலஞ்சம் பெற்று பணிக்கு அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் Chatterjee சுமார் 5 ஆண்டுகள் கல்வி அமைச்சராக இருந்துள்ளார். அக்காலத்தில் இவர் நூற்றுக்கணக்கில் ஆசிரியர்களை பதவியில் அமைர்த்தி உள்ளார். இவர்களில் பலர் ஆசிரிய தகுதியை கொண்டிருக்கவில்லை என்கிறது இந்தியாவின் Enforcement Directorate (CD).

Chatterjee க்கு நெருக்கமான நடிகர் ஒருவர் வீட்டில் இருந்து 200 மில்லியன் இந்திய ரூபாய்களும் ($2.5 மில்லின்), ஆவணங்கள், பொய் நிறுவன ஆதாரங்கள், வெளிநாட்டு பணம், தங்கம் ஆகியனவும் எடுக்கப்பட்டதாக CD கூறியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போது Mamata Banerjee தலைமையிலான Trinamool Congress (TC) ஆட்சியில் உள்ளது. இந்திய காங்கிரசில் இருந்து பிரிந்து மாநில கட்சியாக ஆரம்பித்த TC பின் பா.ஜ. கட்சியுடன் இணைந்தும் போட்டியிட்டு இருந்தது. ஆனால் தற்போது TC கட்சி பிரதமர் மோதி மீது கடும் எதிர்ப்பு கொண்ட கட்சியாக உள்ளது.

TC கட்சி தமக்கும் பிடிபட்ட பணத்துக்கும் தொடர்பு எதுவும் இல்லை என்றுள்ளது.