எகிப்தின் இராணுவ அரசால் Muslim Brotherhood தடை

MuslimBrotherhood

எகிப்தின் Muslim Brotherhood அல்லது Society of Muslim Brothers 1928 ஆம் ஆண்டு இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமூகசேவை இயக்கம். இதன் உறுப்பினர்கள் செலுத்தும் நன்கொடைகளால் இந்த இயக்கம் வைத்தியசாலைகள், சிறு வர்த்தகங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை இயக்கி வந்தது. ஆனாலும் இந்த குழுவை நீண்ட காலமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்திய அரசு சட்டப்படி தடை செய்திருந்தது.

2011 இல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த முபாரக் மக்கள் புரட்சியின் மூலம் வீசப்பட்ட பின் Muslim Brotherhood சட்டப்படி ஒரு அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் தேர்தலில் குதித்த Muslim Brotherhood குழு மோர்சி தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட எகிப்து சென்று ஜனநாயகப்படி ஆட்சிக்கு வந்த இந்த அரசை வாழ்த்தியிருந்தார். ஆளால் Muslim Brotherhood ஐ இஸ்ரவேலோ அல்லது இஸ்ரவேல் சார்பு அமெரிக்க அரசியல் வாதிகளோ விருப்பவில்லை. அத்துடன் சுவுதி அரேபிய ஆட்சியாளரும் தமக்கும் ஆபத்துவரும் என கிலி கொண்டனர். வெளிநாட்டு உதவிகளுடன் ஜெனரல் சிசி (Sisi) இராணுவ சதியின் மூலம் மீண்டும் இராணுவ ஆட்சியை கொண்டுவந்தார்.

ஆட்சிக்கு வந்தது முதல் ஜெனரல் சிசி தேர்தல் மூலம் பதவிக்கு வந்த மூர்சி உட்பட அனைத்து Muslim Brotherhood உறுப்பினர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார். இறுதியில் Muslim Brotherhood டையே தடை செய்துள்ளார்.