எகிப்தின் விமானம் ஒன்று தவறியுள்ளது

EgyptAir

இன்று பிரான்சின் பரிஸ் (Paris) நகரில் இருந்து எகிப்தின் கைரோ (Cairo) நகர் சென்ற Egypt Air விமானம் தவறியுள்ளதாக Egypt Air கூறியுள்ளது. Egypt Air விமானம் Flight MS804 பரிஸ் நகரில் இருந்து கைரோ நகர் நோக்கி 21:09 UTC மணியளவில் புறப்பட்டு இருந்துள்ளது. இந்த விமானத்துடனான தொடர்பு 00:45 UTC மணியளவில் அற்று போயிருந்தது. அப்போது இந்த விமானம் கைரோவில் இருந்து சுமார் 125 km தொலைவில் இருந்துள்ளது.
.
தொடர்பு துண்டிக்கப்பட்டபோது இந்த விமானம் சுமார் 11,000 மீட்டர் (37,000) உயரத்தில், கடல் பரப்பின் மேலே இருந்துள்ளது. இந்த விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் ஆபத்தில் இருப்பதற்கான எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்பட்டு இருக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
.

Air Bus 320 வகையான இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
.