எக்குவடோரில் ஊழலுக்கு எதிரான வேட்பாளர் கொலை

எக்குவடோரில் ஊழலுக்கு எதிரான வேட்பாளர் கொலை

எக்குவடோரில் Fernando Villavicencio என்ற சனாதிபதி வேட்பாளர் கடந்த 10ம் திகதி தலையில் 3 முறை சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவர் அரச ஊழலுக்கு கடுமையான எதிர்ப்பை கொண்டவர்.

இவரை Fito என்று அழைக்கப்படும் Adilf Macias என்ற Los Choneros வன்முறை குழுவின் தலைவன் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட Villavicencio தன்னை Fito மிரட்டியதாக கொலைக்கு முன் கூறியிருந்தார்.

போதை கடத்தலுக்காக 34 ஆண்டு சிறை தண்டனை பெற்ற Fito Villavicencio படுகொலைக்கு முன் பாதுகாப்பு குறைந்த சிறைக்கு அரசால் நகர்த்தப்பட்டு இருந்தான். படுகொலையின் பின் Fito மீண்டும் கடும் பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளான்.

இதனால் Villavicencio வின் குடும்பம் விசனம் கொண்டுள்ளது. அரசு படுகொலையை முற்றாக விசாரணை செய்யவேண்டும் என்கிறது Villavicencio குடும்பம்.

படுகொலை செய்த குழுவில் ஒருவன் உடனே போலீசாரால் கொலை செய்யப்பட்டுள்ளான்.

Villavicencio இடத்துக்கு அவரின் உதவி சனாதிபதி வேட்பாளர் நியமிக்கப்படு உள்ளார். தேர்தல் ஆகஸ்ட் 20ம் திகதி இடம்பெறும்.