எரிக்காத உடல்களுக்கு சாம்பல், 189 உடல்கள் நாறின

எரிக்காத உடல்களுக்கு சாம்பல், 189 உடல்கள் நாறின

அமெரிக்காவின் Colorado மாநிலத்தில் உள்ள Colorado Spring என்ற இடத்தில் உள்ள Return to Nature என்ற மயான அலுவல்கள் நிறுவனத்தில் அரச அதிகாரிகள் 189 உடல்களை கைப்பற்றி உள்ளனர். அனால் அந்த உடல்களை தாம் எரித்து விட்டதாக கூறி மேற்படி நிறுவனம் மரணித்தோரின் சொந்தங்களுக்கு பொய் சாம்பலும், சான்றிதழும் ஏற்கனவே வழங்கியுள்ளது.

அதிகாரிகள் மேற்படி நிலையத்துக்கு சென்றபோது அங்கிருந்த உடல்கள் சிதைவடைந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையத்தின் உரிமையாளர்களான Jon Halford, Carie Halford ஆகியோர் மீது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த நிறுவனம் பலத்த நிதி நெருக்கடியிலும் உள்ளது.

மேற்படி நிறுவனம் உறவுகளுக்கு பொதுவாக சீமெந்தை சாம்பல் என்று வழங்கி உள்ளது. சீமெந்து நீர் பட்டவுடன் இறுகி நிரந்தரமாக கல்லாகும், ஆனால் சாம்பல் இறுகி கல்லாகாது. சாம்பல் நீர் காய்ந்த பின் மீண்டும் சாம்பல் ஆகவே இருக்கும்.

Tanya Wilson என்பவர் தனது தாயின் விருப்பத்துக்கு ஏற்ப Return to Nature வழங்கிய தாயின் சாம்பலை ஹவாய்க்கு எடுத்து சென்று கரைத்ததாகவும், தற்போது தான் கரைத்து சீமெந்து ஆக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

முற்காலங்களில் மேற்கு நாட்டவர் மரணித்த உறவுகளை பெரிதாக உள்ள தமது காணிகளில் ஒரு மூலையில் தாழ்த்தனர். அவ்விடத்தை துப்பரவாக்கி அவ்வப்போது அங்கு சென்று ஆறுதல் அடைந்தனர். ஆனால் தற்போது புறா கூடுகள் போன்ற சிறிய வீடுகளிலும், condo களிலும் வாழும் மக்கள் அதிகரித்து வரும் அளவில் எரிக்கப்படுகின்றனர். குடும்பங்கள் உடைந்து போவதும் எரிக்கப்படுவதற்கு இன்னோர் காரணம்.

மரணித்தோரின் உடல் பாகங்களை விற்பனை செய்த இன்னோர் Colorado மாநில நிறுவனமும் முன்னர் தண்டிக்கப்பட்டு இருந்தது.