ஏழு இலங்கையர் 4 மாதங்களின் பின் யுகிரேனில் விடுதலை

ஏழு இலங்கையர் 4 மாதங்களின் பின் யுகிரேனில் விடுதலை

ஆக்கிரமித்த ரஷ்ய படைகள் யுக்கிரனின் Izyum நகரில் இருந்து பின்வாங்கியதை தொடர்ந்து அங்கு அடைக்கப்பட்டு இருந்த 7 இலங்கையர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். யுகிரேனில் படிக்க அல்லது வேலைவாய்ப்பு பெற சென்ற இவர்கள் மே மாதம் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இவர்கள் யுத்தம் ஆரம்பித்த பின் Kupinask என்ற தமது இருப்பிடத்தில் இருந்து 120 km  தூரத்தில் உள்ள Kharkiv என்ற பெரிய நகரத்துக்கு செல்ல முனைந்துள்ளனர். ஆனால் இவர்களை ரஷ்ய படைகள் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் Vovchansk என்ற ரஷ்ய எல்லையோர நகருக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

ரஷ்ய படைகள் தம்மை கொடுமைப்படுத்தியதாகவும், தம்மை பலவந்தமாக பணிகளுக்கு அமைர்த்தியதாகவும் இவர்கள் கூறியுள்ளனர். இவர்களில் Mary Edit Uthayakumar என்பவர் மட்டுமே பெண் என்றும், ஏனையோர்  ஆண்கள் என்றும் கூறப்படுகிறது.

Dilujan Paththinajakan, Mary Edit Uthayakumar (50 வயது), Thinesh Gogenthiran (35 வயது), Dilukshan Robertclive (25 வயது), ஐங்கரநாதன் கணேசமூர்த்தி (40 வயது) ஆகியோர் தமது துன்பங்களை கூறியுள்ளனர்.

தற்போது இவர்கள் Kharkiv நகரில் உள்ளனர். தாம் தற்போது மகிழ்ச்சியாக உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.