ஏவுகணை தாக்கி ரஷ்ய விமானம் விழுந்தது, 74 பேர் பலி

ஏவுகணை தாக்கி ரஷ்ய விமானம் விழுந்தது, 74 பேர் பலி

ரஷ்ய படைகளின் Ilyushin Il-76 வகை விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 74 பேரும் பலியாகி உள்ளனர்.

தாம் கைப்பற்றிய 65 யூக்கிறேன் படையினரை கைதிகள் பரிமாற்றத்துக்கு எடுத்து வந்த விமானத்தை யூக்கிறேன் ஏவுகணை கொண்டு தாக்கி அழித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

அந்த விமானம் S-300 ஏவுகணைகளை எடுத்து வந்ததாலேயே தாம் அதை தாக்கியதாக யூக்கிறேன் முதலில் கூறியிருந்தது. பின்னர் கைதிகளை ரஷ்யா அந்த விமானத்தில் எடுத்து வந்தது தவறு என்றுள்ளது யூக்கிறேன்.

நேற்று கைதிகள் பரிமாறும் நிகழ்வு ஒன்றுக்கு திட்டம் இருந்ததாகவும் யூக்கிறேன் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த தாக்குதலால் கைதிகள் பரிமாற்றம் இடம்பெறவில்லை.