ஐடா வெள்ளத்துக்கு நியூ யார்க் பகுதியில் குறைந்தது 45 பேர் பலி

ஐடா வெள்ளத்துக்கு நியூ யார்க் பகுதியில் குறைந்தது 45 பேர் பலி

சூறாவளி ஐடா (Hurricane Ida) ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்கு அமெரிக்காவின் நியூ யார்க் நகர் மற்றும் அதை அண்டிய Connecticut, New Jersey, Pennsylvania, Maryland, Virginia மாநில பகுதிகளில் குறைந்தது 45 பேர் பலியாகி உள்ளனர்.

நியூ யார்க் நகரில் பல நிலக்கீழ் ரயில் நிலையங்களுள் வெள்ளம் புகுந்ததால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பல பயணிகள் புதன் இரவு ரயில் நிலையங்களில் தங்க நேரிட்டது.

Philadelphia நகரில் உள்ள Schuylkill ஆற்று நீர்மட்டம் சுமார் 8 மணித்தியாலத்தில் 12 அடிகளால் உயர்ந்து உள்ளது. இது மேலும் சில அடிகளால் உயரலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மெக்ஸிக்கோ குடாவில் (Gulf of Mexico) உருவான சூறாவளி Ida முதலில் Category 4 பலத்துடன் Louisiana மற்றும் Mississippi மாநிலங்களை தாக்கி இருந்தது. இங்கே Ida 170 mph (274 km/h) அளவிலான காற்று வீச்சை வழங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இங்கே 5,800 மின் கம்பங்களும் 1,400 transformer களும் பாதிப்பு அடைந்ததால் சுமார் 107,000 வீடுகள் மின் இணைப்பு இன்றி உள்ளன.

நிலத்தை அடைந்ததும் பலம் இழந்த Ida பின்னர் வடகிழக்கே நகர்ந்து நியூ யார்க் பகுதியை அடைந்திருந்தது. Mississippi முதல் நியூ யார்க் வரையான பகுதிகளில் சுமார் 1.2 மில்லியன் வீடுகள் மின் இணைப்பை இழந்து உள்ளனர்.

இது அமெரிக்காவின் சூறாவளி காலத்தின் ஆரம்பம்.