ஐரோப்பாவில் Googleக்கு $2.7 பில்லியன் தண்டம்

Google

அமெரிக்காவின் Google நிறுவனத்தின் மீது அதன் சட்டவிரோத செயல்கள் (antitrust) காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) $2.7 பில்லியன் தண்டம் விதித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது.
.
தற்போது இந்த $2.7 பில்லியன் தண்டமே ஒரு நிறுவனம் மீது ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட அதிக தண்டமாகும். இதற்கு முன் ஐரோப்பா அமெரிக்காவின் chip தயாரிப்பு நிறுவனமான Intel மீது சுமார் $1.1 பில்லியன் தண்டம் விதித்து இருந்தது.
.
தற்போது பொதுமக்கள் கூகிளின் Android smart phone மூலம் Internet தேடுதல்களை செய்யும்போது, கூகிள் விற்கும் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதையும் கூகிள் அடுத்த 90 நாட்களுள் நிறுத்தவேண்டும் என்றும் கட்டளை இடப்பட்டு உள்ளது.
.
2013 ஆம் ஆண்டில் கூகிள் மீது அமெரிக்காவிலும் இவ்வாறு ஒரு தண்டம் விதிக்கப்பட்டு இருந்திருந்தாலும், குற்றப்பணம் இவ்வளவு அதிகமாக இருந்திருக்கவில்லை.
.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி Margrethe Vestager தனது கூற்றில் கூகிள் “denied European consumers a genuine choice of service and full benefits of innovation” என்றுள்ளார்.
.