ஐ. நாவுக்கு பாடம் புகட்ட இஸ்ரேல் விசா மறுப்பு

ஐ. நாவுக்கு பாடம் புகட்ட இஸ்ரேல் விசா மறுப்பு

ஐ. நாவுக்கு ஒரு பாடம் புகட்டும் நோக்கில் (the time has come to teach a lesson) ஐ. நா.அதிகாரிகளுக்கு இஸ்ரேல் விசா வழங்க மறுப்பு தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பை ஐ. நா.வுக்கான இஸ்ரேல் பிரதிநிதி Gilad Erdan இன்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் Antonio Guterres கூறிய கூற்றில் தவறு உள்ளது என்ற காரணத்தாலேயே தாம் விசா மறுப்பை செய்வதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் தனது கூற்றை இஸ்ரேல் திரிபு செய்வதாக ஐ. நா. செயலாளர் கூறியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் ஹமாஸின் தாக்குதல் காரணம் இன்றி (in a vacuum) என்றும் 56 ஆண்டு கால ஆக்கிரமிப்பே காரணம் என்றும் கூற அதை இஸ்ரேல் ஹமாஸை ஆதரிக்கும் செயல் என்று கூறுகிறது.

ஐ.நா. செயலாளர் தான் பலஸ்தினர்களின் அவலத்தை மட்டுமே கருத்தில் கொண்டதாகவும், ஹமாஸை கருத்தில் எடுக்கவில்லை என்றும் கூறுகிறார்.

இஸ்ரேல் ஏற்கனவே ஐ. நாவின் Martin Griffiths என்ற under-secretary-general for humanitarian affairs அதிகாரிக்கு விசா வழங்க மறுத்துள்ளது.

காஸாவில் தற்போது 2.3 மில்லியன் பலஸ்தீனர் வீடுகளை இழந்து உள்ளனர். அத்துடன் 600,000 ஐ.நா. கூடாரங்களில் உள்ளனர்.