ஐ.நா. பாதுகாப்பு சபை செல்லும் Ukraine விவகாரம்

ஐ.நா. பாதுகாப்பு சபை செல்லும் Ukraine விவகாரம்

நியூ யார்க் நேரப்படி இன்று திங்கள் ரஷ்ய-யுகிரைன் விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்கிறது. ஆனாலும் ரஷ்ய மற்றும் சீனா veto அதிகாரம் கொண்டுள்ளதால் ஐ.நா. பாதுகாப்பு சபை எதையும் சாதிக்கப்போவது இல்லை. இங்கே வெறும் வசைபாடலே இடம்பெறும்.

அண்மை காலங்களில் ரஷ்யா பெருமளவு படைகளை யுகிரைன் எல்லையோரம் குவித்து வருகிறது. ரஷ்யா அவ்வாறு செய்வது யுகிரைனுள் நுழையவே என்று அமெரிக்கா தலைமையிலான NATO கூறுகிறது.

ரஷ்ய படைகளை எல்லையில் இருந்து பின்வாங்குமாறு மேற்கு வற்புறுத்தும் நேரத்தில், யுகிரைன் NATO அமைப்பில் இணைக்கப்படாது என்ற உத்தரவாதத்தை ரஷ்யா வற்புறுத்துகிறது. இரு தரப்பும் மற்றைய தரப்பு பின்வாங்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளன.

NATO நாடுகளிலும் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய இரண்டு நாடுகளுமே அதிக ஆர்ப்பாட்டத்தில் உள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருமளவில் அமைதியாக உள்ளன. யுகிரைனும் விசயத்தை ஊதி பெருபிக்க வேண்டாம் என்று மேற்கு நாடுகளை கேட்டுள்ளது.

ஐ.நா. விதிமுறைகளை மீறி NATO லிபியா மீது தாக்கியதை ரஷ்யா சுட்டிக்காட்டி உள்ளது. NATO வில் அங்கம் கொண்டிராத, NATO நாடு ஒன்றை தாக்காத கடாபியின் லிபியா மீது NATO தனது காடைத்தனத்தை காட்டி இருந்தது. கடாபியை படுகொலை செய்தபின், லிபியா ஆழ முடியாத நாடாக, NATO மெல்ல நழுவி இருந்தது.