ஒபாமாவை இந்தியாவுக்கு அழைகிறார் மோடி

ModiObama

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவை இந்தியாவுக்கு வருமாறு இன்று (2103-11-21) அழைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு January 26 ஆம் திகதி நடைபெறுவுள்ள இந்திய குடியரசு தினத்து (Republic Day) நிகழ்வுகளுக்கே ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார்.
.
அழைப்பை ஏற்று ஒபாமா இந்தியா செல்வார் என வெள்ளைமாளிகையும் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தினத்தில் பங்கு கொள்வது இதுவே முதல் தடவையாக இருக்கும்.
.
அதேவேளை ஒபாமா இதுவரை கால நட்பு நாடான பாகிஸ்தானின் பிரதமரையும் இன்று தொலைபேசியில் அழைத்து அமெரிக்க-பாகிஸ்தான் உறவின் முக்கியம் பற்றியும் கதைத்துள்ளார் என்கிறது வெள்ளைமாளிகை.
.

சில வருடங்களின் முன் அமெரிக்காவால் இனவாதி என அழைக்கப்பட்ட மோடியுடன் இன்று அமெரிக்கா நலன் பேண முன்வருவதுக்கு சீனாவின் அதீத வளர்ச்சியே முதல் காரணம்.