ஒரு காசா தாக்குதலில் 21 இஸ்ரேல் படையினர் பலி

ஒரு காசா தாக்குதலில் 21 இஸ்ரேல் படையினர் பலி

காசாவின் Khan Younis என்ற தெற்கு பகுதியில் ஹமாஸ் இன்று திங்கள் செய்த தாக்குதல் ஒன்றுக்கு 21 இஸ்ரேல் படையினர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் ஆயுத குழுவினர் இஸ்ரேலின் கவச வாகனம் ஒன்று மீது ஏவிய RPG தாக்குதலுக்கே 21 படையினர் பலியாகினர்.

இஸ்ரேல் படையினர் பதித்த வெடி பொருட்களும் கூடவே வெடித்து தாக்குதலை உக்கிரம் அடைய செய்துள்ளது என்று இஸ்ரேல் கூறுகிறது.

இன்று மேலும் 3 இஸ்ரேலின் படையினர் வேறு தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளனர். அதனால் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 219 படையினர் காசாவில் பலியாகி உள்ளனர்.

ஹமாஸ் தரப்பு பலியானோர் தொகையை அது வெளியிடுவது இல்லை.