ஒரே நாளில் 4 root canals, 8 dental crowns, 20 fillings

ஒரே நாளில் 4 root canals, 8 dental crowns, 20 fillings

அமெரிக்காவின் Minnesota மாநிலத்து Kathleen Wilson என்ற பெண் தனக்கு ஒரே நாளில் 4 root canals, 8 dental crowns, 20 fillings வழங்கிய Dr. Kevin Molldrem என்ற தனது பல் வைத்தியரை நீதிமன்றம் இழுக்கிறார்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய அந்த பெண்ணுக்கு பல் வைத்தியரால் 960 mg anesthesia வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் சட்டப்படி அங்கு ஒருவருக்கு வழங்கக்கூடிய அதி கூடிய அளவு 490 mg மட்டுமே.

இந்த பெண் தொடர்ச்சியாக சுமார் 5.5 மணித்தியாலங்கள் வைத்தியம் பெற்றுள்ளார்.

இந்த விசயத்தை ஆராய்ந்த Goldstein என்ற இன்னோர் பல் வைத்தியர் Wilson அவரின் பற்களில் கொண்டிருந்த குறைபாடுகள் உண்மையானவை என்றும் ஆனால் அவை அனைத்தும் ஒரே நாளில் வைத்தியம் பெற்று இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

சில வைத்தியம் குணம் அடைந்த பின்னரே அடுத்த வைத்தியம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்கிறார் Goldstein.