ஒலிம்பிக்கில் வடகொரியாவுக்கு பெரும் வரவேற்பு

KoreanFlag

தென்கொரியாவில் இன்று வெள்ளி இடம்பெற்ற ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் வடகொரியாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆரம்ப விழாவின்போது வடகொரியாவுக்கு முக்கியத்துவம் வழங்குவதை தடுக்க அமெரிக்கா எடுத்த பெரும் முயற்சிகளையும் மீறி  தென்கொரியா வடகொரியாவை உபசரித்து உள்ளது.
.
ஆரம்ப விழாவின் போது வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்கள் இணைந்து ஒரு கொடியின்கீழ் அணிவகித்து உள்ளனர். இந்த விசேட கொடி வெள்ளை பின்னணியில், நீல நிறத்தில் இணைந்த கொரிய வரைபடத்தை கொண்டிருந்தது.
.
வடகொரியாவின் தலைவர் Kim Jong Unனின் இளைய சகோதரி Kim Yo Jong மிக முக்கிய நபராக (VIP) ஆரம்ப விழாவில் கலந்து கொண்டுள்ளார். 1953 ஆம் ஆண்டுக்கு பின் வடகொரியாவின் ஆட்சி குடும்பத்தினர் ஒருவர் தென்கொரியா வந்தது இதுவே முதல்தடவை.
.
அமெரிக்க உப ஜனாதிபதி Pence சுக்கு ஓதுக்கப்பட்ட விசேட VIP பகுதியிலேயே வடகொரியாவின் உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டு இருந்தன.
.
இவர்கள் அமர்ந்திருந்த VIP பகுதிக்கு வருகை தந்த தென்கொரிய ஜனாதிபதி Moon, Kim Yo Jong உட்பட அனைத்து வடகொரிய உறுப்பினர்களையும் கைகொடுத்து வரவேற்றுள்ளார். அவர் மட்டுமன்றி ஜப்பானிய பிரதமர் Shinzo Abe யும் வடகொரிய உறுப்பினர்களை கைகொடுத்து வரவேற்றுள்ளார். ஆனால் ஒரு வரிசை முன்னிருந்த அமெரிக்க உப ஜனாதிபதி பாராமுகத்துடன் அமர்ந்திருந்தார்.
.
ஆரம்ப விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி, வடகொரிய உறுப்பினர்கள் உட்பட அனைத்து VIP களும் வரவேற்பு விழா ஒன்றுக்கு (reception) அழைக்கபட்டு இருந்தனர். ஆனால் அங்கு வந்திருந்த அமெரிக்க உப ஜனாதிபதி 5 நிமிடத்துள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
.

சனிக்கிழமை Kim Yo Jong க்கு தென்கொரிய ஜனாதிபதி Moon தனது ஜனாதிபதி மாளிகையில் மதிய போசனமும் வழங்கவுள்ளார்.
.