கங்கையில் மிதக்கும் கரோனா சடலங்கள்

கங்கையில் மிதக்கும் கரோனா சடலங்கள்

குறைந்தது 40 சடலங்கள் கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சடலங்கள் உத்தர பிரதேச, பீகார் எல்லையிலேயே மீட்கப்பட்டு உள்ளன. இந்த உடல்கள் எப்பகுதியில் வீசப்பட்டன என்பதை அதிகாரிகள் இதுவரை அறியவில்லை.

சில உள்ளூர் செய்திகள் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 150 வரையில் இருக்கும் என்று கூறுகின்றன. Buxar என்ற இடத்தில் மட்டும் திங்கள் 30 உடல்கள் எடுக்கப்பட்டு உள்ளன. சில உடல்கள் பெருமி உள்ளதாகவும், சில அரைகுறையாக எரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவை தற்போது உலுக்கும் கரோனாவின் இரண்டாம் அலையின் உக்கிரத்தை மேலும் அதிகரிக்கிறது சில இடங்களில் பரவும் black fungus (mucormycosis அல்லது zygomycosis) என்ற நோய். இந்திய வைத்தியசாலைகளை black fungus அறிகுறிகளை அடையாளம் காணுமாறு இந்திய அரசு பணித்து உள்ளது.

அமெரிக்கா, பிரித்தானிய, பிரான்ஸ், அஸ்ரேலியா போன்ற நாடுகளிலும் black fungus காணப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் அதன் தொகை மிகையாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்னர் ஆண்டுக்கு ஒரு நோயாளியை காணும் நான் தற்போது கிழமைக்கு ஒரு நோயாளியை காண்கிறேன் என்றுள்ளார் ஒரு வைத்தியர்.

உக்கிவரும் தாவரங்கள் மற்றும் மிருக கழிவுகளில் உள்ள இந்த fungus சுவாசம் மூலம் மனிதருள் செல்கிறது. இது ஏற்கனவே கரோனா போன்ற சுவாச மூலமான நோயை கொண்டோரை மேலும் கடுமையாக பாதிக்கும்.