கடந்த ஆண்டு 870,000 பேருக்கு அமெரிக்க குடியுரிமை

கடந்த ஆண்டு 870,000 பேருக்கு அமெரிக்க குடியுரிமை

2023ம் ஆண்டு சுமார் 870,000 வெளிநாட்டவர் அமெரிக்க குடியுரிமை (citizenship) பெற்றுள்ளனர். அங்கு பெண் ஒருவருக்கு சராசரியாக 1.64 குழந்தைகள் மட்டுமே கிடைப்பதால் குடிவரவும் சனத்தொகையை தக்கவைக்க பயன்படுத்தப்படுகிறது.

இதில் 110,000 பேர் மெக்ஸிக்கோ நாட்டில் இருந்து சென்றவர்கள். இவர்கள் கடந்த ஆண்டு குடியுரிமை பெற்றோர் தொகையின் 12.7% ஆகின்றனர்.

இரண்டாம் இடத்தில் இந்தியர் உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 59,100 இந்தியர் அமெரிக்க குடியுரிமை பெற்று உள்ளனர். இவர்கள் பங்கு 6.7% ஆக .உள்ளது.

மூன்றாம் இடத்தில் பிலிப்பீன் நாட்டவரும் (44,800, 5.1%), நாலாம் இடத்தில் Dominican Republic நாட்டவரும் (35,200, 4%) உள்ளனர்.

பொதுவாக அமெரிக்க குடியுரிமை பெற முன் அந்த நபர் குறைந்தது 5 ஆண்டுகள் அமெரிக்காவில் நிரந்தர வதிவுரிமை (permanent resident) கொண்டிருத்தல் அவசியம்.