கடலடி மீன்பிடி சட்டத்துடன் இந்தியாவும் இணக்கம்

India

இலங்கை அரசாங்கம் அண்மையில் கடலடி மீன்பிடி முறைமையை (bottom trawling) தடைசெய்யும் சட்டம் ஒன்றை நடைமுறை செய்திருந்தது. அந்த சட்டத்தின் அடிப்படையில் பல தமிழ்நாட்டு மீனவர்களை அவர்களின் வள்ளங்களுடன் இலங்கை கைது செய்திருந்தது. இவர்களில் பலர் பின்னர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
.

அண்மையில் இந்திய பாராளுமன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா (Sushma Swaraj) கடலடி மீன்பிடி தடைக்கு தமது மறைமுக ஆதரவை கூறியுள்ளார். அவர் தனது உரையில் கடலடி மீன்பிடி முறைமை கடல்வளத்துக்கு பாதகமானது என்றுளார். அத்துடன் தமிழ்நாடும் தற்போது புதிதாக கடலடி மீன்பிடிக்கு உரிமைகள் வழங்குவது இல்லை என்றுள்ளார் சுஷ்மா.
.
கடலடி மீன்பிடிக்கு பதிலாக ஆழ்கடல் மீன்பிடியை தாம் ஊக்குவிக்க உள்ளததாகவும் சுஷ்மா கூறியுள்ளார். ஆழ்கடல் மீன்பிடிக்கு இந்திய மத்திய அரசு 1,500 கோடி இந்திய ரூபாய்களை செலவழிக்க உள்ளதாகவும் சுஷ்மா கூறியுள்ளார்.
.
அத்துடன் அதிகரித்த ஆழ்கடல் மீன்பிடி கடலடி மீன்பிடியால் உருவாகியுள்ள முரண்பாடுகளையும் தீர்க்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
.

இந்த வருடம் மட்டும் இலங்கை அரசு 15 இந்திய வள்ளங்களையும், 117 மீனவர்களையும் கைது செய்துள்ளது.
.