கட்டப்படும் பாலம் உடைந்து மிசோராமில் 17 பேர் பலி

கட்டப்படும் பாலம் உடைந்து மிசோராமில் 17 பேர் பலி

இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் புதிதாக கட்டப்படும் பாலம் ஒன்று உடைந்து விழுந்ததால் கட்டுமான பணியில் இருந்த 17 ஊழியர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

மிசோராம் மாநிலத்தில் உள்ள Sairang என்ற இடத்தில் பள்ளத்தாக்கு ஒன்றுக்கு குறுக்கே அமைக்கப்படும் பாலமே இன்று புதன் விழுந்து உள்ளது.

மரணித்தோரின் குடும்பங்களுக்கு $2,500 நட்டஈடும், காயமடைந்தோருக்கு $600 நட்டஈடும் வழங்க பிரதமர் மோதி அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பீஹார் மாநிலத்தில், கங்கைக்கு குறுக்கே அமைந்திருந்த பாலம் இரண்டாம் தடவையாக உடைந்து விழுந்திருந்தது.

கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஒன்று உடைந்து 135 பேர் பலியாகினர்.