கட்டாரில் புதிய $15 பில்லியன் விமான நிலையம்

HamadAirport

டுபாய்க்கு போட்டியாக கட்டார் இன்று தனது $15 பில்லியன் பெறுமதியான புதிய விமான நிலையத்தை (Hamad International Airport) திறந்து வைத்துள்ளது. இந்த விமான நிலையம் 2009 ஆண்டில் சேவைக்கு வந்திருக்கவேண்டு. ஆனால் அது பல வருடங்களின் பின் இன்று சேவையை ஆரம்பிக்கின்றது. 2022 ஆம் ஆண்டில் கட்டாரில் நடைபெற இருக்கும் World Cub உதைபந்தாட்ட போட்டிக்கு இந்த புதிய விமான நிலையம் பெரிதும் பயன்படும்.

Qatar Airways, Emirates Airways, Etihad, Lufthansa, United போன்ற மற்றைய விமான சேவைகளும் படிப்படியாக இந்த புதிய விமான நிலையத்தை பயன்படுத்த தொடங்கும்.

ஆரம்பத்தில் இந்த விமான நிலையம் வருடம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் பயணிகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இது 50 மில்லியன் ஆக உயரும். இந்த கட்டடத்தின் மொத்த பரப்பளவு சுமார் 600,000 சதுர-மீட்டர் ஆகும்.

2000 ஆம் ஆண்டில் உலகின் அதிகூடிய பயணிகளை கையாளும் முதல் 30 விமான நிலையங்களில் 18 அமெரிக்காவிலேயே இருந்தது. ஆனால் 2013 அத்தொகை 12 ஆக குறைந்துள்ளது. பதிலாக 2000 இல் முதல் 30 விமான நிலையங்களுள் அடங்கியிராத 3 சீன விமான நிலையங்கள், டுபாய் விமான நிலையம் என்பன 2013 ஆண்டுக்கான முதல் 30 விமான நிலையங்களுள் அடங்கி உள்ளன.