கணணி தயாரிப்பில் இருந்து ஒதுங்குகிறது SONY

SONYVaio

ஒரு காலத்தில் இலத்திரனியல் தயாரிப்பில் முன்னணி வகித்த ஜப்பானிய நிறுவனமான SONY தற்காலங்களில் iPhone, Samsung போன்ற தயாரிப்புக்களால் பின்தள்ளப்பட்டுள்ளது. 2013/03 முதல் 2014/03 வரையான ஒருவருட காலத்தில் SONY உலக அளவில் $1.3 பில்லியன் நட்டத்தை அடைந்துள்ளது. இந்த காலத்துக்கான மொத்த வருமானம் $77.7 பில்லியன்.

அதேவேளை SONY  தனது கணணி தயாரிப்பு பிரிவையும் Japan Industrial Partners (JIP) என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்யவுள்ளது. அதன்படி SONY யின் பிரபல Vaio கணணிகளும் எதிர்வரும் காலங்களில் JPI இனாலேயே தயாரிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் 2014/07 இன் முற்றுப்பெறும்.

பண நெருக்கடியை குறைக்க SONY தனது New York கட்டடம் ஒன்றை $1.1 பில்லியனுக்கும் Tokyo கட்டடங்கள் இரண்டை $1.2 பில்லியனுக்கும் விற்பனை செய்திருந்தது. அத்துடன் சுமார் 50,000 பணியாளர்களையும் பதவிநீக்கம் செய்திருந்தது.

இதன் PlayStation பிரிவு இலாபகரமாக இயங்குகிறது. குறிப்பாக PlayStation 4 மற்றைய video game களிலும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது.