கத்தி குத்துக்கு பிரித்தானிய பா. உ. David Amess பலி

கத்தி குத்துக்கு பிரித்தானிய பா. உ. David Amess பலி

கத்தி குத்துக்கு 69 வயதுடைய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் David Amess இன்று பலியாகி உள்ளார். சம்பவத்தின் பின் 25 வயது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். பலியான உறுப்பினருக்கு 5 பிள்ளைகள் உண்டு.

இவர் லண்டன் நகருக்கு கிழக்கே அமைந்துள்ள தனது தொகுதி மக்களுடன் Eastwood Road North என்ற வீதியில் உள்ள Belfairs Methodist Church ஆலயத்தில் கூடுகையிலேயே மதியம் அளவில் கத்தி குத்துக்கு இறையாகினார்.

1983ம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு வரும் இவர் முதலில் Basildon தொகுதி உறுப்பினராகவும், பின்னர் 1997 முதல் Southend West உறுப்பினராகவும் பதவியில் இருந்துள்ளார்.

ஒரு Conservative உறுப்பினரான இவர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதை எதிர்த்தவர்.

2016ம் ஆண்டு Jo Cox என்ற இன்னோர் பிரித்தானிய பாராளுமன்ற பெண் உறுப்பினரும் தனது தொகுதி மக்களை சந்திக்கையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.