கனடாவில் களவாடப்பட்ட கார்கள் மேற்கு ஆபிரிக்காவில்

கனடாவில் களவாடப்பட்ட கார்கள் மேற்கு ஆபிரிக்காவில்

கனடாவில் களவாடப்பட்ட பல ஆடம்பர கார்கள் நைஜீரியா, கானா (Ghana) போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இரண்டு மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதை அறிந்துள்ளது Marketplace என்ற புலனாய்வு செய்தி அமைப்பு.

சில களவாடப்பட்ட கனடாவின் Ontario மாகாணத்து வாகனங்கள் Ontario மாகாணத்தில் வழங்கப்பட்ட பதிவு தகடுகளுடன் (license plates) நைஜீரியாவில் விற்பனைக்கு இருந்துள்ளன. அதில் ஒன்று CTBC 474 என்ற Ontario தகட்டை கொண்டுள்ளது.

கனடாவில் களவாடப்பட்ட 2018 Lexus RX 350 வாகனம் C$ 85,000 (Naira 28,000,000) க்கு விற்பனைக்கு உள்ளது. கனடாவில் அதன் விலை C$ 48,000 மட்டுமே.

இவ்வாறு ஏற்றுமதிக்கு திருடப்படும் வாகனங்களில் அதிகமானவை Lexus LX, Lexus GX, Range Rover, Range Rover Sport, Hummer H2, BMW 550, Lexus RX, BMW X6, BMW 745, BMW M6.
Push-to-start வகை திறப்பு கொண்ட புதிய வாகனங்களில் உள்ள On-Board Diagnostic port மூலம் கள்ள திறப்பு தயாரிக்கும் வசதியை திருடர் கொண்டுள்ளனர்.