கனடாவில் பெரும் வாகன திருட்டு கும்பல் அகப்பட்டது

கனடாவில் பெரும் வாகன திருட்டு கும்பல் அகப்பட்டது

கனடாவின் Toronto மாநகர போலீசார் பெரும் வாகன திருட்டு கும்பல் ஒன்றை கைது செய்துள்ளது. Project Safai என்ற பெயர் கொண்ட இந்த விசாரணையை போலீசார் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்து இருந்தனர்.

இவர்களிடம் இருந்து C$1.5 மில்லியன் பெறுமதியான பணம், வாகனம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

ServiceOntario என்ற அரச ஊழியர் சிலரும் இந்த திருட்டில் பங்கெடுத்து உள்ளனர். இவர்கள் Ontario மாநில அரசின் போக்குவரத்து அமைச்சில் இருந்து குறி வைக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர், முகவரி ஆகியவற்றை திருடர்களுக்கு வழங்கி இருந்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் பொய்யான VIN (Vehicle Identification Number) உம், அந்த பொய்யான VIN க்கு ஏற்ப பொய்யான Registration ஆவணமும் வழங்கினர்.

திருடர் பொய்யான ஆவணங்களை பயன்படுத்தி அப்பாவிகளிடம் திருடிய வாகனங்களை விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டோர்:

1. கீர்த்தன் மங்களேஸ்வரன், வயது 29

2. கோபி யோகராஜா, வயது 25

3. கஜன் யோகநாயகம், வயது 32

4. மிலோஷ அரியநாயகம், வயது 29, பெண் 

5. Howard Lee, வயது 22

6. Doneika Jackson, வயது 38, பெண் 

7. Andrea Fernandes, வயது 30, பெண் 

https://www.tps.ca/media-centre/news-releases/58014/?fbclid=IwAR3Hd7ssVXjS0I5solt5JvDQSbKaTWt6Wo0Bjw5QFjOXAMMHmM3SL_pR6Kc