கனடாவில் மீண்டும் தமிழ் கொலை

TTC_POP_1

அண்மையில் கனடாவின் Porter விமான சேவையின் பிரசுரம் ஒன்று கொண்டிருந்த ஒரேயொரு சொல்லான ‘வணக்கம்’, குற்றுள்ள ‘ம்’ என்ற மெய் எழுத்துக்கு பதிலாக குற்றற்ற ‘ம’ என்ற உயிர்மெய் எழுத்தில் முடிந்திருந்தது. ஆனால் அதையும் விட மிகையான தமிழ் பிழைகளுடன் கடனாவின் டொரோண்டோ மாநகரின் பொது போக்குவரத்து சேவையான TTC (Toronto Transit Commission) தற்போது பிரசுரம் ஒன்றை பிரசுரித்துள்ளது. TTC சேவையின் POP (Proof-of-Payment) தொடர்பான பிரசுராமே மேலே உள்ளது – முடிந்தால் அதில் உள்ள தமிழை வாசியுங்கள் பார்க்கலாம்..
.
இந்த தவறுகளுக்கு முரண்பட்ட fonts தான் காரணம் என்று கூறி தப்பிவிட முடியாது. TTC நிச்சயமாக ஒரு தமிழரின் உதவியுடன்தான் இந்த மொழிபெயர்ப்பை செய்திருக்கும், சேவைக்கு பணமும் செலுத்தி இருக்கக்கூடும். அதனால் அவர் இந்த தவறுகளை திருத்தியிருத்தல் வேண்டும்.
.
இப்பிரசுரத்தின் கூற்றான “For more information, please visit ttc.ca” என்பதை இலவசமாக கிடைக்கும் Google மொழிபெயர்ப்பு மூலம் மொழிபெயர்க்க,பின்வருமாறு மிக சிறந்த தமிழாக்கம் கிடைக்கிறது. இந்நிலையில் TTC பிரசுர தவறுகள் ஏற்க முடியாதவை.
.
TTC_POP_2
.

அடிமனதில் அரசியல் வெறுப்புக்களை வைத்துக்கொண்டு, ‘தாண்டிக்குளம்’ என்பதை ‘தாண்டிக்குளம’ என்று சிங்களவன் எழுதியதால் கிளர்ந்தெழுந்த தமிழன், தமிழர் மிக முக்கிய பிரசுரங்களில் செய்யும் தமிழ் தவறுகளை மட்டும் காணாதிருப்பான்.
.