கனடாவில் மேலும் 160 அடையாளமற்ற புதைகுழிகள்

கனடாவில் மேலும் 160 அடையாளமற்ற புதைகுழிகள்

கடனாவின் வான்கூவர் நகருக்கும், British Columbia மாநில தலைநகர் விக்ரோரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய தீவுகளில் ஒன்றான Penelakut என்ற தீவிலும் குறைந்தது 160 அடையாளம் இல்லாத புதைகுழிகள் காணப்படுள்ளன. இந்த புதைகுழிகள் தொடர்பான ஆவணங்களும் இல்லை. மேலதிக விபரங்கள் ஓரிரு தினங்களுள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

இந்த தீவு முன்னர் Kuper தீவு என்று அழைக்கப்பட்டது. இங்கிருந்த residential பாடசாலை Kuper Island Residential School என்று அழைக்கப்பட்டது. இந்த பாடசாலை 1890ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை இயங்கியது.

Residential பாடசாலைகளின் நோக்கம் பூர்வீக குடிகளின் சிறுவர்களை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்து, அவர்களுக்கு கிறிஸ்தவ மதமும், ஐரோப்பிய கலாச்சாரங்களும் புகட்டுவதே.