கனடாவில் மேலும் 182 அடையாளம் இல்லாத புதைகுழிகள்

கனடாவில் மேலும் 182 அடையாளம் இல்லாத புதைகுழிகள்

கனடாவின் British Columbia மாநிலத்தில் மேலும் 182 அடையாளம் இல்லாத புதைகுழிகள் காணப்பட்டுள்ளன. இன்றைய அறிவிப்புக்கு உட்பட்ட புதைகுழிகள் Ktunaxa Nation என்று அழைக்கப்படும் பூர்வீக குடியினருக்கு சொந்தமானவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மயானம் Cranbrook என்ற இடத்தில் உள்ளது.

1912ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை இவ்விடத்தில் இயங்கிய St. Eugene’s Mission School என்ற பூர்வீக குடியினருக்கான பாடசாலையையும் (residential school) Catholic Church இயக்கி இருந்தது.

அடையாளம் இன்றி இங்கு புதைக்கப்பட்டு உள்ள உடல்களின் அடையாளங்களை அறியும் முயற்சிகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த உடல்கள் 3 முதல் 4 அடி வரையான ஆழம் குறைந்த புதைகுழிகளிலேயே உள்ளன.

ஏற்கனவே British Columbia மாநிலத்தில் உள்ள Kamloops பகுதியில் 215 அடையாளம் இல்லாத புதைகுழிகளும், Saskatchewan மாகாணத்தில் 751 அடையாளம் இல்லாத புதைகுழிகளும் கண்டெடுக்கப்பட்டு இருந்தன.

பூர்வீக மக்களின் சிறுவர்களை பலவந்தமாக பிரித்து கிறிஸ்தவ, மற்றும் ஐரோப்பிய கொள்கைகளுக்கு ஏற்ப வளர்க்கும் நோக்குடனேயே இந்த residential schools அமைக்கப்பட்டு இருந்தன.

பல நகரங்கள் இம்முறை Canada Day நிகழ்வுகளை நிறுத்தி உள்ளன. ஜூலை 1ம் திகதி இடம்பெறும் Canada Day தினம் கனடாவின் பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் பூர்வீக குடியினர் இந்த தினத்தை கொண்டாடுவது இல்லை.