கனடாவில் வாகனத்தால் மோதி 4 முஸ்லிம்கள் கொலை

கனடாவில் வாகனத்தால் மோதி 4 முஸ்லிம்கள் கொலை

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள London என்ற நகரில் 4 முஸ்லிம்கள் வாகனத்தால் மோதி கொலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த தாக்குதல் நேற்று ஞாயிறு இரவு 8:40 மணியளவில் இடம்பெற்றது. London நகரம் Toronto நகருக்கு மேற்கே சுமார் 200 km தூரத்தில் உள்ளது.

Nathanial Veltman என்ற 20 வயது சந்தேகநபர் உடனேயே கைது செய்யப்பட்டு உள்ளார். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றும், Veltman மீது பயங்கரவாத வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்றும் Paul Waight என்ற போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.

மரணித்தோருள் 74 வயது பெண், 46 வயது ஆண், 44 வயது பெண், 15 வயது பெண் ஆகியோர் அடங்குவர்.ஒரு 9 வயது பையன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். Hyde Park Road என்ற வீதியில் இவர்கள் நடந்து செல்லும்போதே மோதி கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

1901ம் ஆண்டு அளவில் சிறுதொகை லெபனான் முஸ்லிம்கள் லண்டன் நகருக்கு வந்திருந்தனர். London நகரத்து Oxford வீதியில் உள்ள The London Muslim Mosque என்ற பள்ளிவாசலே ஒன்றாரியோவின் முதலாவது பள்ளிவாசல். கனடாவில் அது இரண்டாவது, வடஅமெரிக்காவில் மூன்றாவது.