கனடாவில் இன்று வெப்பநிலை 49.6 C, பலர் பலி

கனடாவில் இன்று வெப்பநிலை 49.6 C, பலர் பலி

கனடாவில் Lytton என்ற British Columbia மாநிலத்து நகரில் இன்று செவ்வாய் வெப்பநிலை 49.6 C (121 F) ஆக இருந்துள்ளது. இதுவரை கனடாவில் எங்கும், என்றைக்கும் 45 C வெப்பநிலைக்கு அதிகமான வெப்பநிலை பதியப்பட்டு இருக்கவில்லை. வான்கூவர் நகரை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற சுமார் 130 திடீர் மரணங்களுக்கு மிகையான வெப்பம் காரணம் என்று நம்பப்படுகிறது.

Lytton நகரில் திங்கள் வெப்பநிலை 47.9 C ஆகவும், ஞாயிரு வெப்பநிலை 46.6 C ஆகவும் இருந்துள்ளது. 1937ம் ஆண்டு Saskatchewan மாநிலத்தில் நிலவிய 45 C வெப்பநிலையே இதுவரை கனடாவில் நிலவிய அதிகூடிய வெப்பநிலை.

அருகில் உள்ள Burnaby என்ற நகரில் 65 பேர் வெப்பம் காரணமாக மரணித்து இருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். Surrey என்ற நகரில் 38 பேரின் மரணத்துக்கும் கடும் வெப்பம் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வன்கூவருக்கு கிழக்கே சுமார் 250 கிம் தூரத்தில் உள்ள Lytton என்ற நகரில் வெப்பம் காரணமாக எவரும் வீடுகளை விட்டு வெறியேறாது முடங்கி உள்ளனர். வழமையாக இங்கு தற்காலங்களில் அங்கு வெப்பநிலை சுமார் 20 C ஆகவே இருக்கும்.

அமெரிக்காவின் Washington, Oregon, California ஆகிய மாநிலங்களும் இந்த வெப்ப தாகத்தில் உள்ளன.