கனடாவில் 3 கல்லூரிகள் மூடல், இந்தியா விசனம்

கனடாவில் 3 கல்லூரிகள் மூடல், இந்தியா விசனம்

கனடாவின் மொன்றியால் நகர் பகுதியில் இயங்கி வந்த CCSQ College (in Longueuil), M. College (in Montreal), CDE College (in Sherbrooke) ஆகிய 3 கல்லூரிகளும் திடீரென மூடப்பட்டு உள்ளன. இந்த 3 கல்லூரிகளும் Rising Phoenix International Inc. என்ற நிறுவனத்துக்கு சொந்தமானவை.

மேற்படி கல்லூரிகள் மூடப்பட்டதால் சுமார் 2,000 இந்திய மாணவர்கள் தமது கட்டுப்பணத்தை இழந்து உள்ளனர் என்று கூறுகிறது கனடாவில் உள்ள இந்திய தூதுவரகம். அத்துடன் தாம் கனடிய மத்திய அரசுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தூதுவரகம் கூறி உள்ளது.

இந்திய தூதுவராகம் நேற்று வெள்ளிக்கிழமை 18ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இந்திய மாணவர்கள் Quebec மாநிலத்தின் Ministry Of Higher Education உடன் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளது.

ஆனால் Quebec மாநில அரசு மாணவர்களை நேரடியாக தமது கல்லூரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளது.

கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், பல மாணவர்கள் கனடாவின் வேறு நகரங்களுக்கு நகர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.