கனடாவில் Ryerson சிலையும் உடைப்பு

கனடாவில் Ryerson சிலையும் உடைப்பு

இன்று ஞாயிறு கனடாவின் Toronto நகரில் உள்ள Ryerson University வளாகத்தில் இருந்த Egerton Ryerson (1803 – 1882) என்பவரின் சிலையும் உடைக்கப்பட்டது.

தற்கால கனடாவின் பொது கல்வி முறைமைக்கு இவரின் பங்கு பிரதானமானது என்றாலும், கனடாவின் ஆதிக்குடியினரின் குழந்தைகளை பலவந்தமாக அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்து கிறீஸ்தவ residential பாடசாலைகளை உருவாக்கவும் இவர் காரணமாக இருந்தார்.

இந்த பாடசாலைகளின் நோக்கம் ஆதிக்குடியினரை அவர்களின் கலாச்சாரங்களில் இருந்து பிரித்து கிறீஸ்தவ மற்றும் ஐரோப்பிய கலாச்சாரங்களில் இணைப்பதே. சுமார் 150,000 ஆதிக்குடி சிறுவர்கள் இந்த பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட்டனர்.

Ryerson University என்ற மேற்படி பல்கலைக்கழகத்து பெயரையும் மாற்றி அமைக்கும்படி அழைப்புகள் விடுக்கப்பட்டு உள்ளன.

கனடாவின் British Columbia மாநிலத்தில் உள்ள Kamloops நகரத்து Kamloops Residential School என்ற பழைய பாடசாலை வளாகத்தில் இருந்து அண்மையில் 215 ஆதிக்குடி சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருந்தன. இவை அடையாளங்கள் எதுவும் இன்றியே புதைக்கப்பட்டு இருந்தன. இந்த பாடசாலை 1978ம் ஆண்டு மூடப்பட்டு இருந்தது.

Sir John A. MacDonald என்ற கனடாவின் முதலாவது பிரதமரும் residential பாடசாலைகளுக்கு காரணமானவர் என்பதால் அவர் தொடர்பான நினைவு அடையாளங்களும் தற்போது விவாதிக்கப்படுகின்றன.